சீரடி சாய்பாபா ஒன்பது வியாழக்கிழமை விரதம் பூசை முறைகளும் – ஆன்மிகநடை

சீரடி சாய்பாபா வாழ்க்கை

சாய்பாபாவின் தாய், தந்தை யாவர்? சொந்த ஊர் எது?இயற்பெயர் என்ன?இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை.


1854-ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு வருகை புரிந்தார் ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை.

சில ஆண்டுகள் கழிந்தன சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும் படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தைத் தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்துகொண்டார்.

சாந்த் பட்டேல் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார் சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி வந்தபோது, பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து வந்தார்.

பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மஹல்சாபதி என்னும் பூசாரி அவரை “சாய்” என்று அழைத்தார்.
சாய்என்றால் படத்தில் “சுவாமி”என்று பொருள். பாபா என்பது இந்தியில் “அப்பா”என்ற பொருள். இரண்டும் இணைந்த “சாய்பாபா”என்ற திருப்பெயரே நிலைத்துவிட்டது.

சாய்பாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். சீரடியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகில் உள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்ப மரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்பு சுவை மாறியது. சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்?என்று கேட்டார்கள். அதற்கு அவர், ” நானே அல்லா! “நானே சங்கரன்!” நானே ஸ்ரீ கிருஷ்ணன் என்று கூறினார். ஆமாம்! அவர் இப்பூமியில் இறை அம்சம் கொண்டவராகவே
அவதரித்தார்!


பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்து உண்டார்.
தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார்.
பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத்தொடங்கியது.பல ஞானிகள் வந்து பாபாவை சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கு எடுத்துக் கூறினார்.

கங்காகீர் என்னும் கர்வமிக்க ஞானிகள் பாபாவின் மகிமையை சோதித்தார். பாபா தன் உள்ளங்கையில் இருந்து கங்கையைப் பெருகச் செய்ய தனது தவறை உணர்ந்தார். பாபா தான் தங்கியிருந்த துவாரகமாயி என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார் இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கெண்ணையை கொடுத்து வந்தன ஒரு நாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தன. பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார் இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது

பாபாவைத் தேடி பக்தர்கள் வர தொடங்கினர் ராதாகிருஷ்ணாமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக் கொண்டதோடு உணவையும் சமைத்து வந்தார். பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும் படி அந்த உணவைத் பெருகச் செய்தார் பாபா.


தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார் சிரிக்க சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார்.
பாபா பஜனையையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பாடல்களையும் பாடும்படி உற்சாகமூட்டினார். சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார்.

ஏழைகளின் துயர் கண்டு பாபா ஒரு தாயைப் போல நடந்துகொண்டார்.
தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார்.

பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக்கற்று உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர் ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்த பண்டிதர்களைக்கூட வியப்படையச் செய்தார். பாபா மதங்களைக் கடந்து நின்றார் துவாரகமாயி மசூதியில் பாபா வீற்றிருந்தார்.


மக்கள் அவரை”சாய் மஹராஜ்” என்று போற்றிக் கொண்டாடினர்.பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் என்ற நிஷ்டா (நம்பிக்கையும்) ஸபூரி (பொறுமையும்) ஆகும். தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கு
எல்லாம் உதி விபூதியே பிரசாதமாக தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா. வாழ்வில் பொறுமையும் தன்மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார். துவாரகமாயி அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது அந்த நெருப்புக் குண்டத்தில் இருந்து எடுக்கப்படும் ஓதுகின்ற பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது .

தன் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார். சாய் மகான்1918-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் தன் ஸ்தூல உடலை உகுத்தார். உதி அளித்து உபதேசம் செய்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா தான் கூறியபடியே தன் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.
பாபா தான் கூறியபடியே தன் உடல் மறைந்த பின் இன்றும் அருள்புரிந்து வருகிறார். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்க பெற்றவர்களுக்கும் சாயி வழிபடும் பேறு கிட்டுகிறது.**!!

ஸ்ரீ சாயி மகான் உறுதிமொழிகள்

  • சீரடியில் காலடி படம் பக்தனுக்கு வரும் ஆபத்து விலகி விடும்.
    *என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களும் போக்குவேன். *இவ்வுலகை விட்டு என் பூதவுடல் மறைந்தாலும் பக்தன் அழைத்தால் ஓடி வருவேன்.
  • திட பக்தி நம்பிக்கை விசுவாசத்துடன் யாசிப்பவன் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.
    *இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று எப்பொழுதும் உணரவும். இது சத்தியம் என்று அறிந்த அனுபவம் பெறுவீர்!
  • என்னை சரணடைந்தோம் வெறும் கையோடு திரும்பினான் என்று இந்த பக்தனாவது இருந்தால் அவனை எனக்கு காண்பியுங்கள். *பக்தன் என்னை எப்படிப்பட்ட பக்தியுடன் உணர்கிறானோ அப்படிப்பட்ட அனுபவங்கள் அவனுக்குத் தருவேன்.
  • எப்பொழுதும் உங்கள் சுமைகளை நான் சுமக்கிறேன் என் வாக்குப் பொய்யாவதில்லை. *நீங்கள் கேட்டது நீங்கள் கேட்பது எல்லாம் நான் கொடுப்பேன். என் உதவியையும் அருளையும் அள்ளித்தர நான் காத்திருக்கிறேன். *பக்தியுடன் என் மொழிகளை மனதில் ஏற்பவனுக்கு நான் கடன்பட்டவன் ஆவேன் *என் திருவடிகளை அடைந்த பக்தன் பெரும் பாக்கியவான் ஆவான்.

ஸ்ரீ சாய்பாபா விரத முறைகள்

*இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். இந்த விரதத்தை ஜாதி மத பேதமின்றி எந்த சார்பினரும் ஏற்கலாம். *இந்த விரதம் அற்புதப் பலன்களை தரவல்லது. ஒன்பது வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும். *விரதத்தை எந்த ஒரு காலத்திலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாய்பாபாவை பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

  • காலை அல்லது மாலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும் ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால் துணியால் துடைத்து சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும்,தீபமும் ஏற்றி சாய் விரத கதையைப் படிக்கவும். சாய்பாபாவை மனதில் நினைத்து தியானம் செய்யவும் பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.
  • இந்த விரதத்தைபழ, திரவிய ஆகாரங்கள் (பால்,டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்க்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை( மதியமோ, இரவோ) இரவு உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.
    *ஒன்பது வியாழக்கிழமைகள் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச்சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோயில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாய்பாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யலாம்.
    *வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். விரதமிருக்கும் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்கள் விரதம் இருக்க முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து,
    ஒன்பது நிறைவு செய்யவும்.

ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய்ராம்

எழுதுவது மா.நந்தினி ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)சேலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *