நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் வீழ்ந்தது  அவுஸ்திரேலியா

உலகக்கிண்ணத்துக்கான T20 கிரிக்கட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதற்போட்டியில் நியூசிலாந்து அணி 89 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

போட்டியை நடாத்தும் அவுஸ்திரேலிய அணிக்கும் அவுஸ்ரேஸியக்கண்டத்தின் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதல் சூப்பர் 12 சுற்றுப் போட்டி சிட்னியில் இன்று சனிக்கிழமை ன நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி,  20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 200 ஓட்டங்களைக்குவித்தது.

201 ஓட்டங்களை வெற்றி இலக்காக  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, 17.01 ஓவர்கள் நிறைவிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.


போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களைக்குவித்த நியூசிலாந்து அணியின் டெவன் கொன்வே தெரிவானார்.


அவுஸ்ரேலிய அணி அடுத்த போட்டியில் இலங்கை அணியையும் நியூசிலாந்து அணி அடுத்தபோட்டியில் ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *