ஊவாவேய், ZTE இறக்குமதி, விற்பனை செய்தல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
நீண்ட காலமாகவே “சீனாவின் உளவுபார்த்தல்” என்ற குற்றத்துக்கு உள்ளாகியிருந்த கருவிகளான ஊவாவேய்[Huawei], ZTE ஆகியவற்றை இனிமேல் இறக்குமதி செய்யலாகாது, விற்கலாகாது என்று அமெரிக்கா தடைசெய்திருக்கிறது. இந்த முடிவானது Huawei Technologies, ZTE Corp och Hytera Communications சீன ஆகிய நிறுவனங்களை அமெரிக்காவில் தமது பொருட்களை விற்கத் தடை செய்கின்றது.
சீனாவில் தயாரிக்கப்படும் தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட கருவிகள் பாவிக்கப்படும் நாடுகளில் உளவுபார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து வருகின்றன. அமெரிக்காவில் மட்டுமன்றி, கனடா, ஐக்கிய ராச்சியம் உட்பட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அதுபற்றிய சந்தேகங்களை எழுப்பியிருந்தன. அதனால் சீனாவின் குறிப்பிட்ட நிறுவனங்கள், மேற்குறிப்பிட்ட நாடுகளின் தொலைத்தொடர்பைக் கட்டியெழுப்பும் அடிப்படை அமைப்புகளைக் கட்டவும் தடை போடப்பட்டிருக்கிறது.
பல தடவைகள் இதுபற்றி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் சீனாவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியால் பல சீனப் பொருட்களை இறக்குவதற்குத் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஊவாவேய் நிறுவன உரிமையாளரின் மகள் (மெங் வாங்சூ), உயர்மட்ட நிர்வாகியுமான ஒருவரைக் கனடா கைது செய்தும் வைத்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்