தென்கொரிய விமான நிலையத்துக்குள் காத்திருந்த ரஷ்யர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
உக்ரேன் படையெடுப்பில் ரஷ்யாவின் சார்பில் போரிடாமல் தப்பிச்சென்று தென்கொரியாவில் அகதிகளாக முயற்சித்த ரஷ்யக் குடிமக்கள் ஐவர் பல மாதங்களாக இன்ச்சியோன் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். அந்த ஐவரின் அகதிகள் விண்ணப்பங்களைப் பரிசீலிக்காமல் நாட்டுக்குள் விட தென் கொரியா தயாராக இல்லை. அந்த ஐவரில் இருவருக்கு அகதிகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஒருவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
ஒக்டோபர் மாதத்தில் அந்த மூவருக்கும் உக்ரேனுக்கு எதிரான போரில் பங்குபற்றப் போர்முனைக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டது. அதனால் அவர்கள் தென் கொரியாவுக்குத் தப்பியோடினார்கள். தென் கொரியாவில் 18 வயதுள்ள ஒவ்வொருவரும் தனது நாட்டுக்காகப் போரிடத் தயாராக இருக்கவேண்டியது கட்டாயம். அதனால், போரில் ஈடுபட மறுப்பதை மட்டும் அரசியல் அகதியாவதற்கான காரணமாக ஏற்றுக்கொள்ள தென் கொரிய நீதிமன்றம் தயாராக இல்லை.
அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இருவரும் தென் கொரியாவுக்குள் நுழைய, நிராகரிக்கப்பட்டவரும், விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கும் மற்றிருவரும் விமான நிலையத்தில் தொடர்ந்தும் காத்திருக்கவேண்டும். அகதி அங்கத்துவம் மறுக்கப்பட்டவர் மேன்முறையீடு செய்யலாம். குறிப்பிட்ட நபர் ரஷ்யாவுக்குத் திரும்பினால் அங்கே கடுமையாகத் தண்டிக்கப்படலாம் என்று அவர்களுடைய வக்கீல் தெரிவித்தார். காத்திருக்கும் மேலும் இருவருடைய விண்ணப்பத்துக்கான பதில்களை இம்மாத இறுதியில் கொடுக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்