வறட்சியால் பாதிப்படையும் இலங்கை..!
சூரியன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதன் வெப்பம் என்னவோ அருகில் தான் இருக்கிறது.பல நாடுகளில் வெப்பம் கணணை
பரிக்கிறது.
இவ்வாறான காலநிலை மாற்றத்தின் காரணமாக இலங்கையில் 4 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான வறட்சியின் நிமித்தம் கிழக்கு,வடமேற்கு,வடக்கு,சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் 5மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இதே வேளை 27 ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மனிதனின் செயற்கையான போக்கு,காடழிப்பு,வளிமாசடையு என பல்வேறு காரணங்களால் புவியானது வெப்பமடைந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.