காலத்தை வென்றவை..!
காலத்தை வென்றவை
காலம் என்பது கண்ணீரை
மட்டுமல்ல காயங்களையும்
மாற்றும் கேள்விகளை
மட்டுமல்ல பதில்களையும்
மாற்றும்..!
கடந்து வந்த பாதைகள்
கடத்தி போக
மறுப்பதில்லை..
காலம் கடந்த நினைவுகளை
பரிசளிக்க தவறுவதில்லை..!
சண்டை போட்டு
பேசாமல் இருக்கும் காலம்
போய் பேசினால் சண்டை
வரும் என்று பயந்து பேசாமல்
இருக்கும் காலத்தில்
வாழ்கிறோம்..!
இதெல்லாம் ஒரு நாள்
கடந்து போகும் என்று
காத்திருந்தேன் ஆனால்..!!
எதுவுமே கடந்து போகாது
எல்லாம் பழகிப்போகும்
என்று உணர்த்தி விட்டது
காலம்..!
நீ எவ்வளவு நன்மைகள்
செய்து இருந்தாலும் அதை
ஒரு நொடியில் மறந்து
விடும் இவ்வுலகம்..
நீ தெரியாமல் செய்த
ஒரு தவறை காலம்
முழுவதும் சொல்லிக்
கொண்டே இருக்கும்.
உஷா வரதராஜன்.
