குவீன்ஸ்லாந்தையும், நியூ சவுத் வேல்ஸையும் மழையும் வெள்ளமும் தாக்கப்போவதாக எச்சரிக்கை.
ஆஸ்ரேலியாவில் பரவிய கொவிட் 19 கட்டுப்பாடுகளால் மூடி வைக்கப்பட்டிருந்த குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் எல்லைகளைத் திறந்துவைத்த ஒரு வார காலத்தில் அப்பகுதியை மீண்டும் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஆபத்து நெருங்குவதாகக் குறிப்பிட்டு மூட ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையே இதே பிராந்தியம் காட்டுத்தீயால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்பிராந்தியத்திலிருக்கும் கடற்கரைகள் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மணல் சாக்குகளால் எல்லைகள் மூடப்படுகின்றன. உலகின் மிகப்பெரும் வெண்மணல் தீவான பிராஸர் தீவு ஒரே வாரத்தினுள் காட்டுத்தீ எச்சரிக்கையிலிருந்து, வெள்ள அபாய எச்சரிக்கைக்கு மாறுகிறது. காலநிலை மாற்றமே இத்தகைய அதிரடி மாறுதலுக்கான காரணமென்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
குவீன்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேர்ன், அலைச்சறுக்கல்காரர்களின் அபிமான தங்கக் கடற்கரை போன்ற பகுதிகளும் மூடப்பட்டுக் கடுமையான காலநிலையை எதிர்கொள்ளத் தயாராகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்