இரகசியத் திருமணத்தின் பின் காரி சிமொண்ட்ஸ், காரி ஜோன்சன் ஆகுகிறார்.

தனக்கு நெருக்கமானவர்களுக்கே கடைசி வரை இரகசியமாக வைத்திருந்து பிரிட்டிஷ் பிரதமர் தனது துணைவியான காரி சிமொண்ட்ஸை வெஸ்ட் மினிஸ்டர் கதீட்ரலில் மனைவியாக்கிக்கொண்டார். சனிக்கிழமையன்று, கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க 30 விருந்தினர்களுடன் மட்டும் திருமணம் அத்தேவாலயத்தில் நடைபெற்றது. அவர்கள் எல்லோருக்கும் மிகக் குறுகிய காலத்துக்கு முன்னர் தான் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. 

ஏற்கனவே இரண்டு தடவைகள் கல்யாணம் செய்துகொண்டு விவாகரத்துப் பெற்ற போரிஸ் ஜோன்சனுக்கும் காரி சிமொண்ட்ஸுகுமான உறவை 2019 இன் ஆரம்பத்திலேயே பிரிட்டிஷ் பத்திரிகைகள் வெளிப்படுத்தியிருந்தன. 2020 பெப்ரவரியில் அவர்களிருவரும் தாம் தம்பதிகள் என்றும் தமக்குப் பிள்ளையொன்று கிடைக்கவிருப்பதாகவும் அறிவித்தனர். அவர்களுடைய மகன் வில்பிரெட் கடந்த வருடம் ஏப்ரலில் பிறந்தான். 

பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருக்கும் ஒருவர் திருமணம் செய்துகொள்வது 200 வருடச் சரித்திரத்தில் இது முதலாவது தடவையாகும். ஜோன்சனின் தந்தை டான் சகோதரிகளிருவர் மற்றும் சகோதரன் லியோ ஆகியோர் திருமணத்தில் பங்கெடுத்தார்கள். ஜோன்சனின் முதலிரண்டு திருமணங்களும் கத்தோலிக்க சமயத்தில் நடக்காததால் இத்திருமணம் கத்தோலிக்க தேவாலயத்தில் நடாத்திவைக்க அனுமதி கிடைத்தது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *