விற்கப்படும் புதிய மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் இருமடங்காகியிருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கும் மின்சாரக் கல வாகனங்களின் எண்ணிக்கை அதே மாதங்களில் கடந்த வருடத்தில் விற்கப்பட்ட அதே வித வாகனங்களின் எண்ணிக்கையைவை விட இரண்டு மடங்கானவை என்று ஐரோப்பிய வாகனத் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோலவே எரிசக்தியை மீண்டும் பாவித்தியங்கும் வாகனங்களின் [hybrid] விற்பனையும் வேகமாக அதிகரித்திருப்பதாக அவர்களின் விற்பனை விபரங்கள் தெரிவிக்கின்றன.
2020 ஏப்ரல் – ஜூன் மாதங்களில் ஐரோப்பாவில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட மின்கல வாகனங்கள் மொத்தமாக விற்கப்பட்டவைகளில் 3.5 விகிதமாக இருந்து இவ்வருட அதே மூன்று மாதங்களில் 7.5 விகிதமாக அதிகரித்திருக்கின்றன. 210,298 மின்கல வாகனங்களை ஐரோப்பிய நாடுகளில் விற்றிருப்பதாகத் தெரிகிறது. முக்கியமாக ஸ்பெய்னிலும், ஜேர்மனியிலும் அவைகளின் விற்பனை பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.
அதேசமயம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களின் விற்பனை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 20.4 விகிதத்திலிருந்து 29.4 விகிதத்தால் டீசல் வாகனங்களின் விற்பனையும், 41.8 லிருந்து 51.0 ஆக பெட்ரோல் வாகன விற்பனையும் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்