அல்ஜீரியா-மொரொக்கோ இழுபறியில் அல்ஜீரிய வான்வெளி மொரோக்கோவுக்கு மூடப்பட்டது.
மொரொக்கோவுடனான ராஜதந்திரத் தொடர்புகளை ஆகஸ்ட் 24 இல் முறித்துக்கொண்ட அல்ஜீரியா அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே தனது தூதுவரை அங்கிருந்து திரும்ப வரவழைத்துக்கொண்டது. இரண்டு நாடுகளின் எல்லையிலிருக்கும் மேற்கு சஹாரா என்ற என்ற பிராந்தியம் யாருடையது என்பது பற்றிய சர்ச்சையே இவ்விரு நாடுகளுக்குமிடையே நீண்ட காலமாக இருந்துவரும் மனக்கசப்புக்குக் காரனமாகும்.
அராபிய இனத்தவரில் ஒரு பகுதியான சஹ்ராவி மக்கள் வசிக்கும் அப்பிராந்தியத்தில் 20 விகிதத்தை அந்த மக்களுடைய விடுதலை இயக்கமான பொலிசாரியோ முன்னணி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அவர்களுக்கு அல்ஜீரீயாவின் ஆதரவு இருக்கிறது. 80 % பிராந்தியம் மொரொக்கோவின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. மொத்தமாக மேற்கு சஹாராவில் ஒரு தனி நாட்டை உருவாக்கி ஆளப் போரிடும் சஹ்ராவிகளுகு அல்ஜீரியா தனது ஆதரவை வழங்கி வருகிறது.
அல்ஜீரியாவால் மூடப்பட்ட வான்வெளியில் 15 விமானங்களையே மொரொக்கோவின் Royal Air Maroc விமான நிறுவனம் இயக்கி வருகிறது. எனவே அந்த நடவடிக்கையால் தமக்கேதும் பெரிய இழப்பில்லை என்கிறது மொரொக்கோ. தமது விமானங்களை வேறு வழியாகத் திருப்புவது பெரிய பிரச்சினையில்லை என்கிறார்கள் அவர்கள்.
இரண்டு நாடுகளுக்குமான நிலத்திலான எல்லை 1990 களிலிருந்தே முடப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்