எவரெஸ்ட் சிகரம் 0.86 செ.மீ வளர்ந்திருக்கிறது.
இமயமலையின் அதியுர்ந்த மலை உச்சியான எவரெஸ்ட்டின் உயரம் 8,848.86 மீற்றர் என்று நேபாளமும், சீனாவும் சேர்ந்து அறிவித்திருக்கின்றன. அப்பிராந்தியத்தில் ஏற்பட்ட பல பூமியதிர்ச்சிகளின் பின்னர் அதன் உயரம் மாறியிருக்கலாம் என்ற கணிப்பில் நேபாளம் அதை அளக்க முடிவெடுத்து, நிறைவேற்றியது.
இதற்கு முதல் 1954 ம் ஆண்டில் இந்தியாவால் எவரெஸ்ட்டின் உயரம் கணக்கிடப்பட்டது. அச்சமயத்தில் அதன் உயரம் 8,848 மீற்றர்கள் என்று காணப்பட்டது. எவரெஸ்ட் சிகரத்தின் இன்னொரு பெயர் சொமொலுங்மா [Mt Chomolungma] என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்