கொவிட் 19 ஐக்கிய ராச்சியத்தையும் விட அதிகமான இறப்புக்களை இத்தாலியில் அறுவடை செய்திருக்கிறது.
ஐரோப்பாவில் அதிகமாக கொவிட் 19 தாக்க ஆரம்பித்த நாடு இத்தாலி. அதன் பின் ஐக்கிய ராச்சியமும் மோசமாகப் பரவலிலும், இறப்புகளிலும் முதலிடத்தைப் பெற ஆரம்பித்தது. 64,000 உயிர்களை இத்தாலியில் குடித்து ஐரோப்பாவில் அதிக தாக்குதலுக்குள்ளாகிய நாடாக மீண்டும் இத்தாலி.
அதே சமயம் இத்தாலியைப் பொறுத்தவரை ஆறுதலடையவைக்கும் செய்தியும் இருக்கிறது. ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், ஐக்கிய ராச்சியம் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளும் இரண்டாவது கொரோனாத்தொற்று அலையில் மோசமாகத் தாக்கப்பட்டு வியாபார நிறுவனங்களைப் பூட்டியும், தனிப்பட்ட நடமாட்டங்களை வெகுவாகக் குறைத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தும் இச்சமயத்தில் இத்தாலி தனது கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளை இலகுவாக்கி வருகிறது.
இத்தாலின் அதிகாரபூர்வமான செய்திகளின்படி கொரோனாத்தொற்று நாட்டில் வேகமாகக் குறைந்து வருகிறது. டிசம்பர் 13 ம் திகதி முதல் நாட்டில் நிலவிவந்த பல கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்