அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து பயன்படுத்த அனுமதி.
ஓரு வாரத்திற்கு முன்னர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தைத் தாம் பாவிக்கப்போகும் முதன்மையான மருந்து என்று ஆர்ஜென்ரீனாவின் + 60 ஜனாதிபதி அறிவித்த்தும், அதையடுத்து புத்தின் அது + 60 க்குப் பாவிக்கப்படலாமா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தனியாக நடாத்தப்பட்ட அந்த ஆராய்ச்சிகளின்படி ஸ்புட்னிக் V அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பாவிக்கப்பட்டு வெற்றிகரமான விளைவுகளைத் தந்ததாக அறிவிக்கப்படுகிறது. ஆர்ஜென்ரீனாவுக்கு அனுப்பப்பட்ட 300,000 தடுப்பு மருந்துகளை அந்த நாட்டின் அரசு தனது மக்களுக்குப் பாவிக்க ஆரம்பித்திருக்கிறது.
அதேசமயம், ரஷ்யாவில் நோய்த்தொற்று படுவேகமாக அதிகரித்து வருவதுடன், நாட்டுக்குள் ஆரம்பித்த தடுப்பு மருந்து விநியோகத்திற்கான தேவையை அரசு கவனிக்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டு வருவதை ரஷ்ய ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் விமர்சிக்க ஆரம்பித்து வருகின்றன.
ரஷ்ய அரசின் விபரங்களின்படி நாட்டில் தற்போது மூன்று மில்லியன் பேர் தொற்றுக்காளாகியிருக்கிறார்கள், 54,000 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமென்று குறிப்பிடப்படுகிறது. மார்ச் – ஒக்டோபர் மாத இடைவெளியில் இறந்துபோன ரஷ்யர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட 165,000 பேர் அதிகமென்கிறது நாட்டின் மக்கள் விபரக் கணிப்பு திணைக்களம். எனவே உண்மையான இறப்பு எண்ணிக்கையும் மிகவும் அதிகமென்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்