நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பு மருந்து போட்ட நாடுகளில் உலகில் முதலிடம் இஸ்ராயேலுக்கே.
மிகவும் உயர்ந்த குறிக்கோளுடன் இஸ்ராயேல் தனது நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி மாத முடிவுக்குள் நாட்டின் இரண்டு மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்துவிடவேண்டுமென்பது அவர்களது திட்டம்.
சுமார் ஒன்பது மில்லியன் குடிமக்களைக் கொண்ட இஸ்ராயேலின் 380,000 பேர் இதுவரை முதலாவது ஊசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாளின் 24 மணி நேரமும் திறந்திருக்கும் மருத்துவ சேவை மையங்களில் இந்த ஊசிகள் போடப்படுகின்றன. முதல் கட்டமாக மருத்துவ சேவையாளர்களும், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியைப் பெறுகிறார்கள். தினசரி 150,000 பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்கிறார்கள்.
மத்தியக் கிழக்குப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போதும் இஸ்ராயேல் அதிக மருந்துகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இஸ்ராயேலைத் தொடர்ந்து பஹ்ரேனும், ஐக்கிய ராச்சியமும் தமது மக்களில் பலருக்கு தடுப்பு மருந்தைப் போட்டிருக்கின்றன.
எகிப்தும், ஈராக்கும் பல மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்க ஒழுங்கு செய்திருக்கின்றன. மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டும் கூட தடுப்பு மருந்தைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்கும் நாடாக இருக்கிறது ஈரான்.
சாள்ஸ் ஜெ. போமன்