சர்வதேசப் பார்வையாளர்களெவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்குப் போகமுடியாது.

ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கு மீண்டும் ஒரு பலமான அடி கொரோனாப் பரவல்களால் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடாக எந்த ஒரு வெளிநாட்டவரும் ஒலிம்பிக்ஸ் பார்வையாளராக உள்ளே வர ஜப்பான் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டு ஒழுங்குகள் செய்யும் குழுவின் நிர்வாக டொஷிரோ மோட்டோ அதுபற்றிச் சனியன்றி அறிவிக்கும்போது, ஏற்கனவே விற்கப்பட்ட 600,000 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களைப் பார்ப்பதற்கான சீட்டுக்களுக்கும், 300,000 பாரா ஒலிம்பிக்ஸ் பார்வையாளர் சீட்டுக்களுக்குமான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

“விளையாட்டுக்களில் பங்குபற்றும் வீரர்கள், ஜப்பானியப் பொதுமக்களின் ஆரோக்கியப் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுக்களில் பங்குபற்றுவோரும், அவர்களுடைய குழுக்களும் ஜப்பானுக்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூலி 24 – ஆகஸ்ட் 08 திகதிவரை ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அதையடுத்து பாரா ஒலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 24  இல் தொடங்கி செப்டம்பர் 05ம் தேதி முடிவடையும். 

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மூலம் ஜப்பான் பெற்றிருக்கக்கூடிய சுற்றுலா வருமானங்கள் இந்த முடிவால் பெரிய அளவில் பாதிக்கப்படும். “ஆனாலும், நிலவும் சூழ்நிலையில் வேறொரு முடிவும் சரியாகத் தெரியவில்லை,” என்று டோக்கியோவின் நகரபிதா இதுபற்றித் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *