சட்டவிரோத பயணங்களின் நடுவே பாரிஸில் அந்தரிக்கும் இந்தியர்கள்.
விமான நிலையத்தில் விசேட தரிப்பிட வசதி.
ஜரோப்பா ஊடாகச் சட்டவிரோதமாகப் பயணிக்கும் இந்தியப் பயணிகள் பலர் பாரிஸ் விமான நிலையத்தில் தரித்துச் செல்வதால் அவர்களைக் கண்காணிக் கும் நோக்கில் விசேட தரிப்பிட வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் எல்லைகள் ஊடாகப் பயணிக் கின்ற இந்தியர்கள் காத்திருப்பதற்கான விசேட தங்குமிட வசதிகள் பாரிஸ் விமான நிலையத்தின்’ முனையம் 2A’ (terminal 2A) இல் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகளை ஆதாரம் காட்டி ஏஎப்பி செய்தி தெரிவிக்கிறது.
பிரான்ஸ் எல்லைகள் ஊடாகப் பயணிக் கின்ற இந்தியர்கள் காத்திருப்பதற்கான விசேட தங்குமிட வசதிகள் பாரிஸ் விமான நிலையத்தின்’ முனையம் 2A’ (terminal 2A) இல் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகளை ஆதாரம் காட்டி ஏஎப்பி செய்தி தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பயணிப்பது அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொஸ்கோ – மெக்ஸிக்கோ இடையே சட்டவிரோதமாகப் பயணித்து வட அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்கள் பலர் பாரிஸ் விமான நிலையத்தில் தரித்துச் செல்கின்றனர் என்றும் அவ்வாறு பயணம் செய்வோர் டசின் கணக்கில் விமான நிலையத்தில்
தங்குவதால் பெரும் வைரஸ் கொத்தணிகள் உருவாகி விடலாம் எனவும் அஞ்சப்படுகிறது. சுமார் 90 இந்தியப் பயணிகள் தற்சமயம் பாரிஸ் விமான நிலையத்தில் மாறிச் செல்வதற்காக காத்திருக்கின்றனர். அவர்களில் பலர் காலாவதியாகிய வைரஸ் பரிசோதனை சான்றிதழ்களையே வைத்திருக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தங்களை வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த அவர்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
பிரான்ஸுக்கு வருகின்ற இந்தியப் பயணிகள் உட்பட சில நாடுகளைச் சேர்ந்தோர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்படுகின்றனர். விமானங்கள் மாறிச் செல்வோர் விமான நிலையத்தில் காத்திருக்கும் பகுதிகளிலேயே தங்கி நிற்கின்றனர். பயணிகள் வரவு குறைந்ததால் விமான நிலையத்தின் காத்திருக்கும் பிரிவுகள் சமீப நாட்களாக வெறிச் சோடியுள்ளன. ஆனால் இந்தியப் பயணிகள் பலர் இன்னமும் காத்திருப்போர் பிரிவில் தங்கியுள்ளனர். அத்தகையோருக்கே படுக்கை மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன .இவர்களில் பலரிடம் வீஸா ஆவணங்கள் இல்லாததால் மொஸ்கோவுக்குத் திருப்பி
அனுப்பப்படவுள்ளனர் என்று செய்தி வெளியாகி உள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.