முதற் சுற்று வாக்கு முடிவுகளின்படிபாரிஸ் பிராந்தியத்தில் தொடர்ந்தும் வலேரி பெக்ரெஸே முன்னணியில்!

இரண்டாம் சுற்றில் அவரை வெல்ல இடதுசாரிகள் ஒன்று கூடி வியூகம் எதிர்பார்க்கப்பட்டது போலவே முதற் சுற்று வாக்களிப்பில் பாரிஸ் பிராந்தி யத்தில் வலதுசாரி வேட்பாளர் வலேரிபெக்ரெஸ் (Valérie Pecresse) தலைமையிலான பட்டியலில் இடம்பெறுகின்ற வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

இல்-து-பிரான்ஸ் எனப்படுகின்ற பாரிஸ் பிராந்திய சபையை இதுவரை கட்டுப் பாட்டில் வைத்திருந்த வலெரி பெக்ரெஸ் தொடர்ந்து அடுத்த தவணைக் காலத்துக்கும் தலைவியாகத் தெரிவாகுவது உறுதியாகி உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக மரின் லூ பென்னின் தேசிய முன்னணி(Rassemblement National – RN) கட்சியின் இளம் வேட்பாளரான ஜோர்டான் பார்டெல்லா (Jordan Bardella) இரண்டாவது நிலையில் உள்ளார். மூன்றாம் இடம் இடது சார்பு சூழலியல் கட்சி (EELV) வேட்பாளர் ஜூலியன் பயோவுக்குக்(Julien Bayou) கிடைத்துள்ளது. சோசலிஸக் கட்சியின்(PS)வேட்பாளரும் பாரிஸ் நகரசபை துணை மேயருமாகிய ஊடகவியலாளர் உத்ரே புல்வார் (Audrey Pulvar) ஐந்தாவது இடத்துக்குப் பின்தங்கி உள்ளார்.

இந்த நிலையில் மூன்றாம் இடத்தில்உள்ள சூழலியல் கட்சி வேட்பாளர்(EELV) ஜூலியன் பயோ தலைமையில் அனைத்து இடதுசார்புக் கட்சிகளும் ஒன்றிணைந்து பலமான ஓர் இடது அணி யாக இரண்டாவது சுற்றை எதிர்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வலேரி பெக்ரெஸைத் தோற்கடிப்பதற் காக இவ்வாறு வியூகம் அமைக்கின்றஅழைப்பை பாரிஸ் மேயர் ஆன் கிடல்கோ நேற்றிரவு விடுத்திருக்கிறார். பிரான்ஸின் பிராந்தியங்கள், மாவட்டங்களை நிர்வகிக்கின்ற சபைகளுக்கானமுதற் கட்ட வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. இரண்டாவது சுற்று எதிர்வரும்ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

முதற் சுற்றில் பின்தங்கிய கட்சிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்பாகத் தமக்குள் ஒன்றிணைந்து பேசிப் புதிய கூட்டணிகளை அமைத்து இரண்டாவது சுற்றை எதிர்கொள்வதற்குத் தேர்தல் விதிகள் இடமளிக்கின்றன.

🟣 தேசிய அளவிலான முடிவுகள் முதல் சுற்றில் 66.1 வீத வாக்காளர்கள்வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.முதற் சுற்று முடிவுகளின் படி தேசிய அளவில் வலதுசாரி றிப்பப்ளிக்கன் கட்சியும் அதன் கூட்டணிகளும் 28.4%வீத வாக்குகள் பெற்று முன்னணியில்உள்ளன. மரீன் லூ பென்னின் தீவிரவலதுசாரி தேசிய முன்னணி 19.3%வீத வாக்குகளுடன் இரண்டாவது நிலையிலும், சோசலிஸக் கட்சியும் அதன் கூட்டணிகளும் 15.8% சதவீத வாக்குகளுடன் மூன்றாவது நிலையிலும் உள்ளன.

நான்காவது இடம் 13.2 வீத வாக்குகளுடன் சூழலியல் சார்பு கூட்டணிக்குக் கிடைத்துள்ளது. அதிபர் மக்ரோனின் La République En Marche கட்சி 10.6%வீத வாக்குகளுடன் ஐந்தாம் இடத்தில் பின்தங்கி உள்ளது.

மரீன் லூ பென்னின் கட்சி இந்த முறைபிராந்தியங்களில் ஒன்றையாவது கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதற் சுற்றில் அவரது கட்சி மார்செய் நகரை உள்ளடக்கிய Provence-Alpes-Côte d’Azur பிராந்தியத்தில் முன்னணியில்உள்ளது.

பாரிஸிலிருந்து குமாரதாஸன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *