பர்ஸலோனா நகரமும், அதன் அடையாளங்களில் ஒன்றானா சக்ராடா பமிலியாபுனித பலிகொடுக்கப்பட்ட குடும்பம் [Sagrada Familia]தேவாலயமும்.

கி.மு 300 வருடங்களுக்கு முன்னர் ஹமில்கார் பர்ஸா என்ற இராணுவத் தளபதியால் நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்பதால் அதன் பெயர் பர்ஸலோனா என்றாகியதாகச் சிலரால் அந்த நகரின் பெயருக்கான காரணம் குறிப்பிடப்படுகிறது. உதைபந்தாட்டம், அழகிய சிற்பங்கள், சுற்றுலா, அழகிய கடற்கரை போன்றவைகளுக்குப் பிரபலமான நகரமான பர்ஸலோனா 1.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது.

சமீப வருடங்களில் சுற்றுலாப் பயணிகளால் தொல்லை என்ற அளவுக்கு குறிப்பிடப்படும் பர்ஸலோனாவுக்கு வருடாவருடம் 7.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. பர்ஸலோனா நகரம் ஸ்பெய்னின் மாநிலங்களில் ஒன்றான கத்தலோனியாவின் தலைநகரமாகும்.

இந்த நிகழ்ச்சியில் நாம் பர்ஸலோனா நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்களை ஈர்க்கும் சக்ராடா பமிலியா தேவாலயத்தைப் பற்றியும் உரையாடியிருக்கிறோம். பர்ஸலோனா நகரில் வெவ்வேறு இடங்களிலும் காணப்படும் பல கலாச்சார, மற்றும் சாதாரணக் கட்டிடங்களைத் தனது பிரத்தியேகக் கைவண்ணத்தால் செதுக்கியிருப்பவர் அந்தோனியோ கௌடி என்ற கலைஞராகும். 

1882 இல் ஆரம்பிக்கப்பட்ட சக்ராடா பமிலியா தேவாலயத்தின் பல சிற்பங்களிலும், அமைப்புக்களிலும் கௌடியின் தனித்துவதைக் காணலாம். சமய வேறுபாடின்றி எல்லோரும் சென்று காணவேண்டிய ஒரு கலாச்சார, சரித்திரப் பொக்கிஷம் இதுவெனலாம். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *