காபூலில் ஐ.நா.பாதுகாப்பு வலயம்நிறுவக் கோருகின்றார் மக்ரோன்”தலையீடு” எனத் தலிபான் மறுப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு வலயம் ஒன்றை நிறுவேண்டும் என்றுஅதிபர் எமானுவல் மக்ரோன் யோசனைவெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளால்அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமனிதாபிமானப் பணிகளைப் பாதுகாப்பதற்கு அங்கு ஒரு வலயம் (‘safe zone’) அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மக்ரோன் வார இறுதியில் ஈராக்கிற்குவிஜயம் செய்த சமயம் அங்கு வைத்து இந்த யோசனையை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருக்கும் தலிபானின் அரசியல் பிரிவின் பேச்சாளர், அதனை வெளிநாட்டுத் தலையீடு என்று கூறி நிராகரித்துள்ளார்.”ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திரநாடு. பிரான்ஸிலோ ஜேர்மனியிலோ இவ்வாறு ஒரு பாதுகாப்பு வலயத்தை நிறுவ முடியுமா?”-என்று அவர் திருப்பிக் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யாசீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கியஐ. நா. பாதுகாப்புச் சபை ஆப்கானிஸ்தான் நிலைவரம் தொடர்பாக விவாதிப்பதற்கு இன்று திங்கட்கிழமை கூடுகின்றது. அச் சந்தர்ப்பத்திலேயே மக்ரோனின் யோசனை வெளியாகி உள்ளது.

காபூலில் பாதுகாப்பு வலயம் நிறுவுகின்ற யோசனை அடங்கிய பிரேரணையைபிரான்ஸும் பிரிட்டனும் இணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ளன என்ற தகவல்வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் காபூலில் இருந்து இதுவரை2ஆயிரத்து 834 பேரை வெளியேற்றிஉள்ளது என்ற தகவலை வெளியிட்டிருக்கின்ற மக்ரோன், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் தொடர்பாகத் தலிபான்களுடன் பேச்சு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் வெளிநாடுகளின் மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்சமயம் அது தலிபான்களின்கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ. எஸ். தீவிரவாதிகள் விமான நிலையம் மீது ரொக்கற்குண்டுகளை வீசித் தாக்க முயற்சித்துவருகின்றனர். பதிலுக்கு அமெரிக்காட்ரோன் விமானங்களைப் பாவித்துதாக்குதல்களை நடத்தி வருகிறது. கடைசியாக அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் சிக்கி சிவிலியன்கள் பத்துப்பேர்உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *