உலகின் அதிக வயதான கிரிக்கெட் வீரர் 110 வயதில் மரணமடைந்தார்.

இங்கிலாந்து அணிக்காக உலகப் போட்டிகளில் 1937 இல் விளையாட ஆரம்பித்து 1949 வரை ஏழு தடவைகள் அந்த நாட்டுக்காக விளையாடியவர் எய்லீன் ஆஷ். ஆஸ்ரேலியாவுக்கு எதிராக தனது முதலாவது போட்டியில் விளையாடிய அவர் 98 வயதுவரை கோல்ப் விளையாடி வந்தார். எய்லீன் ஆஷ் இறந்துவிட்டதாக இங்கிலாந்தின் கிரிக்கட் சங்கம் அறிவித்தது.

தனது 103 வயது வரை வாழ்ந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நோர்மன் கோர்டன் எய்லீன் ஆஷுக்கு முன்பு அதிக வயதுவரை வாழ்ந்த போட்டிக்கிரிக்கெட் வீரர் ஆக இருந்தார்.

எய்லீன் ஆஷ் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் உளவுத்துறையில் சேவை செய்தவராகும். 2017 ம் ஆண்டு பிரிட்டிஷ் மாதர் அணி உலகக்கிண்ணத்தைக் கிரிக்கெட்டில் வென்றபோது லோர்ட்ஸ் மைதானத்தில் எய்லீனை வரவழைத்து மணி ஒலிக்கவைத்துக் கௌரவித்தார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்