கள்ளமில்லா அன்பு

வன்மத்தை உமிழ்ந்தால் உடைந்து போகுமே உறவுகள்
இன்பத்தை சுமந்தால் இலகுவாகுமே இதயம்

நேற்றையக் கணக்கில்
வரவும் செலவும்
மிச்சம் கொள்கின்றன
வார்த்தை வடிவில்

வண்ணம் கொண்ட வாழ்க்கை வாசம் வீசும் நேரமாக உயர பறக்கின்றது

குறை தேடிக் கூடும் அன்பு
நிலைத்திடுவது இல்லை
நெஞ்சினிலே

வேசம் காட்டும் விழிகள்
கருணை கொள்வதில்லை
பாசம் வீசும் உள்ளம்
காரம் கொட்டுவதில்லை

தீ செய்த காயங்கள்
தால் ஏற்படுத்தும் வடுக்களைக் காட்டிலும் கொடுமையன்று

ஓர் ஒளியின் கீற்றில் உலக இயக்கம்
அடங்கி நிற்பதைப் போல
அன்பெனும் ஆசையில் அகிலம் சுழலட்டும்

அர்த்தம் தேடும் நம் புன்னகைக்குள்
ஆழ விழுதுகளாய்
அன்பே இருக்கட்டும்

கள்ளமில்லா அன்பு
காதலுடனே நிற்கும்
அர்த்தமற்ற அன்போ
கலக்கம் தந்து காயங்கள் ஏற்படுத்தும்

சிரியுங்கள்
உங்கள் அன்பு பூப்பதற்காக
மட்டுமே!

எழுதுவது :ராதை சுப்பையா, ஈப்போ