இங்கிலாந்தில் திறக்கப்பட்ட சிரித்திரன் புத்தகக்கடை

இங்கிலாந்தில் முதன்முதலாக சிரித்திரன் புத்தகக்கடை அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் Royal Country of Berkshire மாநிலத்தில் Slough நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


குறித்த சிரித்திரன் புத்தகக்கடை Slough நகரில் புதிதாக திறக்கப்பட்ட விவசாயி எனும் மிகப்பெரிய வணிகத்தலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் Slough நகர மேயர் முகமட் நஸீர் (Slough Major Mohammed Nazir) அவர்களும்
லண்டன் பாராளுமன்ற கபினெட் உறுப்பினர் ஜேம்ஸ் (London Parliament Cabinet Member James C Swindlehurst) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதேவேளை சிரித்திரன் புத்தகக்கடைக்கான தளத்தை வழங்கிய விவசாயி நிறுவன உரிமையாளர்கள்  திரு தாசன் மற்றும் வரதன் ஆகியோருடன்  நலன்விரும்பிகள் பலரும் இணைந்து கொண்டனர்.

இவர்களுடன் சிரித்திரன் ஆசிரியர் குழுவின் தலைவரும் யாழ் Centre for Creativity and Innovation நிறுவன் தலைவருமான திரு சுரேஷ் கணபதியும் கலந்து கொண்டார்.

ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனியிடம் பெற்ற சிரித்திரன் , லண்டனில் புத்தகக்கடையாக இலக்கிய உலகில் தடம்பதிக்கிறது என்பது வாசகர்கள் பலருக்கும் மகிழ்வைத்தரும்  செய்தியாகும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

குறித்த புத்தகக்கடை ஈழம், மலையகம் என பல நூல்களையும் பெற்றுக்கொள்ளும் தளமாக அமையும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

நேரடியாக சிரித்திரன்  புத்தகக்கடைக்கு விஜயம் விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு செல்லமுடியும்

Vivasayi Supermarket
27- 31 Elmshott Lane
Cippenham
Slough
SL1 5QS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *