உண்மையை ஊமையாக்காதே…

பிறருக்குத் தீங்கிழைக்க பேசிடும் பொய்மைகளை//
வாழ்மையெனக் கருத கூறினார் வள்ளுவர்//

மெய்பேசி வாழ்ந்திடும் மனிதர்கள் சிலரே//
மெய்மையை ஊமையாக்கி பார்ப்பவர் பலரே

காலத்தின் மாற்றமோ மாயையின் தோற்றமோ//
கட்டாய நிலையதுவோ தட்டாமல் தொடர்ந்திடுமோ//

மேல் வர்க்க சமுதாயம் கையூட்டை போற்றுது//
அடித்தள மக்களினம் வேதனையில் குமுறுது

பொய்மையும் வீரநடையுடன் சட்டத்தை நாடுது//
காண்கின்ற நீதிதேவதையின் கண்களும் கலங்குது//

பொய்மையெனும் சாக்கடையில் ஊறிப்போன மனித இனமே// இச்செயல்கள் தொடருமானால் நீயும் பொய்யாவாய்

மாற்றம் உண்டாக்குவதை கடமையென நினை// மெய்யாக வாழ்வேனென்ற திண்ணத்தை விதை//

தனிமனித உறுதிமொழிகள் ஒன்றாகச் சேர்ந்தால்//
தரணி முழுதும் மாற்றங்கள் தோன்றிடுமே தன்னால்…..

எழுதுவது: காயத்ரிசுந்தர் ,சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *