அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின் விநியோகம்|வெளியாகியது வர்த்தமானி
நாட்டின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக மின்விநியோக சேவையை பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியாகியது.
மேற்படி அறிவித்தலை சிறீலங்கா அதிபர் கோட்டபாய வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிவிப்பு இன்று ஜூன் மாதம் 8ம் திகதியிலிரைந்து செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இன்று நள்ளிரவு முதல் மின்சார சபையின் பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அறிவித்திருந்த நிலையில், தற்போது இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய செய்தி
எழுதுவது : யோதிகுமார்