காலநிலை மாற்றங்களை மட்டுப்படுத்த அமெரிக்காவின் 370 பில்லியன் டொலர்கள் திட்டத்தை செனட் சபை ஏற்றுக்கொண்டது.

உலகளவில் காலநிலை மாசுபடுத்துவதில் மிகப் பெரும் பங்களிக்கும் நாடுகளில் முதன்மையான ஒன்று அமெரிக்காவாகும். சரித்திர ரீதியில் முதலாவது தடவையாக அமெரிக்கா காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான மாற்றங்களைக் கொண்டுவரும் செலவுகளுக்கான வரவுசெலவுத் திட்டமொன்றைச் செனட் சபையில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. சரிக்குச்சரியான வாக்குகளைக் கொண்ட டெமொகிரடிக் கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்ததன் மூலம் அத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

காலநிலை மாற்றத் திட்டங்களுக்கான வரவுசெலவுத்திட்டம் அங்கீகரிக்கப்பட முன்னர் ஒரு முழு நாள் செனட் சபை விடாமல் விவாதித்தது. ரிபப்ளிகன் கட்சியினர் கடைசிக் கட்டம் வரை திட்டத்தை முறியடிக்க முயன்றனர். டெமொகிரடிக் கட்சியைச் சேர்ந்த ஜோ மன்சன் என்ற செனட்டர் இத்திட்டத்தை ஆரம்பத்திலிருந்து கடுமையாக எதிர்த்தார். அவரது வாக்குக் கிடைக்காவிட்டால் செனட் சபையில் வெல்ல முடியாது என்ற நிலைமையில் கடைசிக் கட்டம் வரையில் டெமொகிரடிக் கட்சியினரிடையே பேரங்கள் பேசப்பட்டன. 

திட்டங்களுக்கான தொகைக்காக அமெரிக்கர்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கப்படும் என்பது ரிபப்ளிகன் கட்சியினரின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. வரவிருக்கும் தேர்தல்களில் வரிச்சுமையை உணரும் வாக்காளர்கள் ஆட்சியை மாற்றுவார்கள் என்று ரிபப்ளிகன் கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *