உலக நாடுகள் எதற்கும் கொடுக்காத அளவு நன்கொடைகளை பிரிட்டிஷ் பா.உ- களுக்கு மீது பொழிந்திருக்கிறது கத்தார்.
உல்லாச ஹோட்டலில் விடுமுறைகள், குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டுகள், உயர்ந்த கட்டண விமானப் பயணங்கள் போன்ற நன்கொடைகளை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடந்த ஒரு வருடமாக மழையாகப் பொழிந்திருக்கிறது கத்தார் அரசு. அதன் பெறுமதி சுமார் 251,208 பிரிட்டிஷ் பவுண்டுகளாகும். அதே காலகட்டத்தில் உலகின் எந்த ஒரு நாட்டின் அரசும் செலவிடாத அளவுக்கு கத்தார் பிரிட்டிஷ் பா-உ-கள் மீது செலவிட்டிருக்கிறது. தொகையானது 15 நாடுகளின் அரசுகள் ஒன்றாக பிரிட்டிஷ் பா-உ-கள் மீது அதே காலகட்டத்தில் செலவிட்டதை விட அதிகமானதாகும்.
2021 க்கு முந்தைய ஐந்து வருடங்களில் பிரிட்டிஷ் பா.உ-கள் கத்தாரிடமிருந்து 100,000 பவுண்டுகள் பெறுமதியான நன்கொடைகளைப் பெற்றதாக தமது வருமான விபரங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த 12 மாதங்களில் அது இரட்டையை விட அதிகமாகியிருக்கிறது. அந்த பா.உ-க்கள் பிரிட்டிஷ் சட்டத்துக்கு முரணாக அதைச் செய்யவில்லை எனியும் அத்தனை பெரிய தொகை நன்கொடைப் பரிசுகளைப் பெற்றுக்கொள்வது அவர்களுடைய கதவுகளைக் கத்தாருக்கு ஆதரவாகத் திறக்கக் காரணமாகலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
கத்தார் அரசிடம் அந்த நன்கொடைகளுக்கான காரணம் விசாரிக்கப்பட்டபோது அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்கிறார்கள் இவ்விடயத்தைக் குடைந்து அறிந்த பத்திரிகையாளர்கள்.
பரிசுகளைப் பெற்ற பல பா.உ-கள் கத்தாருக்கு ஆதரவான வகையில் பாராளுமன்ற வாதங்களில் பேசியிருக்கிறார்கள். சில சமயங்களில் கத்தாரின் மனித உரிமைகள் பற்றிய விவாதங்களில் வெவ்வேறு விதமாக கருத்துகளைத் திசைதிருப்பியிருக்கிறார்கள் என்கிறார்கள் ஆராய்ந்த தி கார்டியன் பத்திரிகையாளர்கள். அவர்கள் பரிசுகளைப் பெற்ற குறிப்பிட்ட சில பா.உ- களின் பாராளுமன்ற நடவடிக்கைகளையும் பரிசுடன் ஒன்றிணைத்து ஒப்பிட்டு இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்