எப்போது இனி பரீட்சை..?

இலங்கையின் கல்வி முறைமை உலகளவில் மிக தரம் வாய்ந்தது.உலகில் எழுத்தறிவு அதிகம் உள்ள மக்களில் இலங்கை முதன்மை வகிக்கிறது. இந்நிலையில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,“10 ஆம் தரத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை நடத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் தற்போது உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றோம்.

எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும்.

இந்த செயற்பாட்டை திடீரென செய்ய முடியாததுடன், 1, 6 மற்றும் 10 ஆகிய தரங்களில் ஆரம்பிக்கும் வகையில் ஆரம்பம்,

கனிஷ்ட இளநிலை மற்றும் சிரேஷ்ட இளநிலை என்ற அடிப்படையில் மூன்று வகைப்படுத்தலின் கீழ் இது மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் தாம் பயணிக்க வேண்டிய எதிர்கால திசையைத்,

தேர்ந்தெடுக்கும் சுதந்திரமான சமூகத்தை உருவாக்கும் அடித்தளம் தயார் செய்யப்பட வேண்டும் “என தெரிவித்துள்ளார்.

சிறந்த பிரஜைகளை நாட்டுக்கு வழங்குவது கல்வி அறிவே…இதனை சிறந்த முறையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டியது அனைவரினதும் பொருப்பாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *