காதலி காதலனுக்கு வழங்கிய உணவில் இருந்த அதிர்ச்சி…!

காதலர்கள் சின்ன உணவு பொருட்களை வாங்கி தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் அதிக மகிழ்ச்சியடைகின்றனர்.

அந்தவகையில் இங்கிலாந்து நாட்டில் கென்ட் நகரில் வசிக்கும் சாம் ஹேவர்ட் மற்றும் எமிலி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இந்த வகையில் தனது காதலனுக்காக எமிலி ஒரு சீன உணவகத்தில் காளான் நூட்லிஸ் சூப் ஓடர் செய்துள்ளார் .அதனை வாங்கி காதலனுக்கு ஆசையாக வழங்கி இருக்கிறார் .இதனை காதலனும் வாங்கி பருகி இருக்கிறார் பாதி சூப் குடித்த பிறகு ஏதோ வால் ஒன்று தென்பட்டுள்ளது அதனை அவர் எடுத்து பார்த்து இருக்கிறார் பார்த்தால் பெரிய எலி ஒன்று இருப்பதை கண்டு திகைத்துள்ளார்.அதன் பிறகு அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார் .அதன் பின் குறித்த உணவகத்திற்கு அழைப்பை மேற்கொண்டு நடந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அச்சமயம் காதலியிடம் சூப் வாங்கியதற்கான பற்று சீட்டு இல்லாத நிலையில் குறித்த நிறுவனமானது பணத்தையும் கொடுக்காத நிலையில் அந்த சூப்பும் தங்கள் விடுதியினுடையது அல்ல என மறுத்துள்ளது.

காதலர்களே உணவு வாங்கும் போது பார்த்து வாங்குகள் , நீங்கள் வாங்கியதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும் போது அதனை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்.

மிக முக்கியமாக நிறைய ஆண்கள் கடையில் உன்பதை விட காதலின் கைகளால் செய்யப்படும் வீட்டு உணவிற்கே அதிகம் விரும்புகின்றனர் .வீட்டு உணவில் அன்பும் இருக்கும் சுத்தமும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *