யாராலும் நெருங்க முடியாத இதிகாசம்…!
இராமபாணத்திற்கும்
இராமநாமத்திற்கும்
தான்
இங்கு
எப்போதும்
துவந்த
யுத்தமே
தவிர
வேறு
எவராலும்
நெருங்க
இயலா
இதிகாசம்.
துவந்தம்
இருவருக்குள்
தான்.
ஒன்று
காவிய
நாயகன்
ஸ்ரீ ராமன்
இன்னொன்று
அவன்
நாமத்தை
உச்சரிக்கும்
ஸ்ரீ அனுமான்.
ஒருவன்
குரு.
மற்றவன்
சிஷ்யன்.
ஒருவன்
பரமாத்மா.
மற்றவன்
பராக்கிரமசாலி.
ஒருவனை
ஒருவன்
மறுக்காத
மறக்காத
காவியம்
இராமாயணம்.
இடைபட்ட
மக்கள்
வந்து
துதித்து
இம்மை
மறுமையில்
இருவரையும்
துதிப்பார்கள்.
மதங்களை
கடந்தும்
சாதிகளை
கடந்தும்
இனங்களை
கடந்தும்
குலங்களை
கடந்தும்
மொழிகளை
கடந்தும்
உருக
வைக்கும்
கீர்த்தனைகள்
இராமனின்
மணிமகுடம்.
அயோத்தியில்
மட்டுமல்ல
அவன்
ஓவ்வொரு
இல்லத்தில்
குழந்தைகளுள்
உறையும்
அந்தர்யாமி
ஸ்ரீ பாலராமன்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985
