இன்றைய பிரீமியர் லீக் போட்டிகளில் Bournemouth, Crystal Palace, Manchester United, Everton ஆகிய அணிகள் வெற்றி

இன்றைய பிரீமியர் லீக் போட்டிகளில் Bournemouth, Crystal Palace, Manchester United, Everton ஆகிய அணிகள் வெற்றியைப்பதிவு செய்தன.

முன்னதாக Wolves அணியை எதிர்த்தாடிய Bournemouth அணி 1- 0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
அதேபோல crystals place அணி, Newcastle அணியை எதிர்த்தாடி , 2- 0 என்ற கோல்கணக்கில் வெற்றியைப்பதிவு செய்திருந்தது.

மற்றைய எதிர்பார்ப்பான போட்டிகளாக இடம்பெற்ற போட்டிகளில் Manchester United அணி Sheffield United அணியுடனான போட்டியில் வெற்றியைப்பதிவு செய்ய , Liverpool அணி Everton அணியிடம் மண்கவ்வியது.

Manchester United அணி மிகப்பலமாக 4- 2 என்ற கோல்கணக்கில் Sheffield அணியை வெற்றிகண்டது.

அதேபோல Liverpool அணி , Everton அணியிடம் 2-0 என்ற கோல்கணக்கில் தோற்றது.


அணித்தர வரிசையில் முந்தியிருக்கும் வாய்ப்பை தக்க வைக்க Liverpool அணி இன்றைய போட்டியின் தோல்வியினால் இந்தவாரத்தில் இழந்திருக்கிறது.
நேற்றைய போட்டியில் Arsenal அணி Chelsea அணியை 5-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று அணித்தரவரிசைப்பட்டியலில் முதன்னிலையை தக்கவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *