பானையும் பானகமும் | கவிநடை
பானங்கள் பருகிட
பயனாகும்
மண்பானைகள்!
விறகு அடுப்பை
எரிய விட்டு
மண் சட்டியில்
குழம்புக் கூட்டு!
தரையில்
குந்திக் கொண்டு
தலைவாழை
இலை போட்டு
நீர் தெளித்து
உண்டு களித்தல்
பேரின்பமாயிற்று!
சூட்டைத் தனித்திட
சுண்டி ஈர்க்கும்
மண்சட்டி மோரும்
மனதுக்குள் குளிரும்!
மண்ணுக்குள் புதையுரும்
மரணித்தப்
பூதவுடலுக்குக்
கொள்ளியிடும்
முன்பு
தணிப்பைத் தந்திடும்
மண்பானை நீரும்!
எரித்தப் பின்னர்
எஞ்சும் சாம்பலை
ஏந்தும்
நினைவலை அதே பானை!
முன்னோர் வகுத்த
முறைப் பாங்கு
மண்ணோடு மண்ணாவது
மறுக்க முடியாத
மனிதக் குல
மரபு!
சி.ம.அபிமாலா
ஜொகூர்பாரு
மலேசியா