கடல் வழியாக ஐக்கிய ராச்சியத்துக்கு அகதிகாக வருகிறவர்கள் அனுப்பப்படும் இடம் ருவாண்டா!
தமது நாட்டுக்குள் அனுமதியின்றி அகதிகாக வருபவர்களைக் குறைக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்தில் நின்றது டென்மார்க். அவ்வகதிகள் அந்த அனுமதி பெறத் தகுதியானவர்களா என்று அராயும்வரை அவர்களை ஆபிரிக்க நாடொன்றில் தங்கவைக்க இடம் தேடுவதாக டென்மார் ஓரிரு வருடத்துக்கு முன்னரே அறிவித்திருந்தது. அதை, நிஜத்தில் நிறைவேற்றதாக அறிவித்திருக்கிறது ஐக்கிய ராச்சியம்.
ரபிரிட்டிஷ் பிரதமரின் அறிவிப்பை ருவாண்டா அரசு ஊர்ஜிதம் செய்திருக்கிறது. ருவாண்டாவுக்கு அனுப்பப்படுகிறவர்கள் அந்த நாட்டின் சட்டத்தின்படி கையாளப்படுவார்கள். அந்த நாட்டு மக்களுக்கு ஈடான உரிமைகளைப் பெறுவார்கள். இந்தப் பரீட்சாத்தரத் திட்டத்துக்காக ருவாண்டா ஐக்கிய ராச்சியத்திலிருந்து 120 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளைப் பெற்றுக்கொள்ளும். வரவிருக்கும் மாதங்களில் முதலாவது விமானம் அகதிகளுடன் ருவாண்டாவை நோக்கிப் பறக்கும்.
இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து ஐக்கிய ராச்சியத்துக்குள் பிரவேசித்து அகதி அந்தஸ்து கோருகிறவர்கள் அனைவரையும் ஆபிரிக்காவில் ருவாண்டாவுக்கு அனுப்பவிருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று அறிவித்திருக்கிறார். அத்துடன் ஆங்கிலக் கால்வாயின் கண்காணிப்பைத் தாமே பொறுப்பெடுக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
“பிரிட்டிஷ் மக்கள் நாம் எங்கள் எல்லைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று பல தடவைகள் கோரி வாக்களித்திருக்கிறார்கள். பிரெக்ஸிட் வாக்கெடுப்பிலும் பலர் ஆதரவாக வாக்களிக்கக் காரணம் எமது எல்லைக்குள் சட்டத்துக்கு எதிராக நுழைபவர்கள் மீதான கட்டுப்பாட்டை நாமே வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவே,” என்று போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
சமீபத்தில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்த ஒரு படகுடன் பல நீரில் மூழ்கி இறந்தார்கள். அந்த ஆபத்தான பணம் பெற்றுக்கொண்டு மனிதர்களை ஐக்கிய ராச்சிய எல்லைக்குள் கடத்தி வருபவர்களுக்கு அங்கே ஆயுள் தண்டனை விதிக்கப்படும். சட்டபூர்வமாக வருபவர்களை ஐக்கிய ராச்சியத்தின் எல்லைகளில் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டுமானால் சட்டங்களை மீறுகிறவர்களைத் தடுக்கவேண்டும் என்கிறார் பிரதமர் ஜோன்சன்.
எத்தனையோ முயற்சிகளால் தடுக்க முயன்றும் இதுவரை இந்த ஆண்டு சுமார் 4,500 பேர் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரிட்டனுக்குள் நுழைந்திருக்கிறார்கள். பிரான்சுடன் சேர்ந்து ஐக்கிய ராச்சியத்தின் கடல்படை ஆங்கிலக் கால்வாயின் கண்காணிக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தை ஒழுங்காக மற்றத் தரப்பு கடைப்பிடிக்கவில்லை என்ற எரிச்சல் இரு தரப்பினராலும் சமீப காலத்தில் பல தடவைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளில் மனஸ்தாபம் ஏற்படுவதை பிரிட்டிஷ் அரசு விரும்பவில்லை.
போரிஸ் ஜோன்சனின் அறிவிப்பு பல மனித உரிமை அமைப்புக்களின் எதிர்ப்பை உடனடியாகப் பெற்றிருக்கின்றன. அம்னெஸ்டியின் அமைப்பாளர் ஜோன்சனின் இந்த நகர்வை ஆஸ்ரேலியா கடல்வழியாக வரும் அகதிகளை எப்படிக் கையாண்டது அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளுடன் ஒப்பிட்டு விமர்சித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்