இதுதான் சமூகம்
இதுதான் சமூகம்
பேசினால் வாயாடி / வளவளப்புக்காரன்…
பேசாவிட்டால் ஊமை /
ஊமையாய் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்பவன்
(silent killer) ….
தேன் போல் பேசி
தேள் போல் நடிக்கும் சமூகம்…
மனம்விட்டு பேசினால்
அப்பாவி…
கொஞ்சம் தவறி ஏதோ செய்தால் அல்லது பேசினால் மூளையில்லாதவன்….
அதிகம் தைரியத்துடன் பேசினால் திமிரு / அகங்காரம் …
மறைத்தால் நடிப்புக்காரன் …
சமூகம் இப்படித்தான்…
மனங்கள் மாற்றம் அடைய வேண்டும் மனிதம் மாற்றத்தை அடைய ..
குரல்களை காதில் வாங்கினால் நம்மால் சுய சிந்தனையுடன் வாழ முடியாது என்பதுவே நிதர்சனம்.
எழுதுவது: பஹ்ரியா பாயிஸ்