சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி உடன்படிக்கையை துரிதப்படுத்துமாறு கேட்ட ரணில்

நிதி உதவியை பெறுவதற்கான சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


குறித்த கோரிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவிடம் கோரியதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நிதி உதவியை வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு நிதி கிடைக்கும் வகையில், IMF  உடன்படிக்கையை துரிதப்படுத்துமாறு,
அத்துடன், IMF பணியாளர் பிரதிநிதிகளை விரைவில் இலங்கைக்கு அனுப்புமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.

IMF முகாமைத்துவ பணிப்பாளருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த வேண்டுதலை  பிரதமர் விடுத்துள்ளார்.

குறித்த பணியாளர்கள் குழு நாட்டை வந்தடைந்தவுடன் அவர்கள் மட்டத்திலான  ஆரம்ப ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முடியும் என்று குறிப்பிடப்படுகிறது.

இலங்கை மற்றும் IMF ஆரம்ப கட்ட பணியாளர்கள்  மட்ட ஒப்பந்ததத்தை பூர்த்தியாக்குவதன் மூலம் நிதி தொடர்பான  ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார் என்றும் பிரதமர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எழுதுவது : யோதிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *