பிறந்து 3 நாட்களேயான குழந்தையை வைத்தியசாலைக்கு பின்னால் போட்டு சென்றவர்கள் கைது..!
பிறந்த குழந்தைகளை குப்பைகளிலும் பொது இடங்களிலும் மனிதாபிமானமற்ற முறையில் போட்டு விட்டு செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.
இதில் பெரும் பாலும் தாம் பெற்ற பிள்ளைகளை போட்டு செல்வது தான் மிக மிக வேதனைப்பட வேண்டிய அம்சமாகும்.
இந் நிலையில் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தை ஒன்றை மஹியங்கனை போதனா வைத்திய சாலைக்கு பின்னால் கை விட்டு சென்ற சந்தேகத்தில் கிருந்துரு கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிறந்து மூன்று நாட்களேயான அந்த குழந்தை வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.