ஈரான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தைப் பரிசீலிப்பதற்காக ஆட்களைத் தேடுகிறது.
சமீப நாட்களில் கொவிட் 19 இறப்புக்கள் சுமார் 55,000 ஆகிவிட்ட தங்கள் நாட்டின் மக்களைப் பாதுகாக்கத் தேவையான தடுப்பு மருந்தை வெளியிலிருந்து வாங்க முடியாமல் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் இருக்கின்றன என்று குறைப்பட்டது ஈரான். ஆனால், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவக்ஸ் ஒன்றியம் மூலம் அதற்கான உதவிகள் செய்யப்பட்டதால் ஈரான் தனது பணத்தைச் செலவழித்து வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளை வாங்கப்போவதாக அறிவிக்கிறது.
அதே சமயத்தில் ஈரான் தனது நாட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஒன்று மனிதரின் மீது ஆராய்வுகளுக்காகத் தயாரென்றும் அதற்காகப் பரீட்சார்த்திகளைத் தேடி வருவதாகவும் அறிவிக்கிறது.
ஈரானின் மத்திய வங்கித் தலைவர் அப்துல் நஸார் ஹம்மாதி 244 மில்லியன் டொலர்களைச் செலவழித்து வெளிநாட்டிலிருந்து மருந்துகளை வாங்க ஒழுங்குகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். எந்த நிறுவனத்துடன் அவ்வொப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது என்பதை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்