அமெரிக்க ஜனாதிபதியின் அறுதிவாக்கை செல்லாதாக இரு கட்சிகளும் கைகோர்க்கின்றன.
வருடத்துக்கான பாதுகாப்பு மசோதாவை ஏற்றுக்கொண்டு தன் கையெழுத்தை வைக்கக் கடந்த வாரம் டிரம்ப் மறுத்துவிட்டார். அந்த மசோதா ஏற்கனவே விவாதித்துத் தயார்செய்யப்பட்டாலும் அவர் தனது ஜனாதிபதி அறுதிவாக்கால் அதை நிறுத்தினார்.
குறிப்பிட்ட மசோதாவின் சில இராணுவத் தளங்கள் பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களைத் தண்டிக்கவேண்டும் என்ற சட்டம் உண்டாக்கப்படவேண்டும் என்பவை அந்த மசோதாவை ஆதரிக்க டிரம்ப்பின் கோரிக்கைகளாக இருந்தன.
அமெரிக்கப் பாராளுமன்றத்தில் டிரம்ப்பின் கட்சியினரும், டெமொகிரடிக் கட்சியினரும் ஒன்றிணைந்து அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டதன் முலம் டிரம்ப்பைக் கைவிட்டுவிட்டார்கள். இதன் மூலம் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் முதல் தடவையாக அவரது கட்சியினர் அவருக்கெதிராக வாக்களித்திருக்கிறார்கள்.
அந்த மசோதா இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் செனட் சபையிலும் முன்வைக்கப்படவிருக்கிறது. அங்கேயும் இதையே செனட் சபையும் ஏற்றுக்கொள்ளுமானால் டிரம்ப்புக்கு மேலுமொரு வீழ்ச்சி ஏற்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்