Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

“2030 ம் ஆண்டு முதல் நாம் மின்சாரத் தனியார் ஊர்திகளையே விற்போம்,” என்றது வொல்வோ கார்ஸ்.

ஜெனரல் மோட்டர்ஸ், வோக்ஸ்வாகன், போர்ட், சுஸூகி வரிசையில் இப்போது வொல்வோ கார்ஸ் நிறுவனமும் 2030 முதல் தாம் விற்கப்போகும் வாகனங்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் என்கிறது. காரணம், “சுற்றுப்புற சூழல் மாசுபடல், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தல்” என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 

https://vetrinadai.com/news/ford-cars-electric/

“நாங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக எங்களால் வேகமாக மின்சாரச் சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கு மாறமுடியும். எங்கள் பூமியின் நிலைமையைக் கவனித்து, வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை எதிர்நோக்கி நடப்போமானால் இதைவிட வேறொரு வழியும் இல்லை என்று எங்களுக்குத் தெரிகிறது. அத்துடன் வேகம், செயல்திறன் கொண்ட மின்சார இயந்திரங்களை எங்களால் உருவாக்கவும் முடியும்,” என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த வொல்வோ கார்ஸ் நிறுவனத்தின் உயர் நிர்வாகி ஹோக்கன் சாமுவேல்ஸன் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *