1 % சுபீட்சமானவர்கள் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவு 50 % வறிய மக்கள் வெளியிடுவதை விட அதிகமாக இருக்கின்றது.
இலையுதிர்காலத்தில் பிரிட்டனில் நடக்கவிருக்கும் காலநிலை மாற்றங்கள் பற்றிய COP26 மாநாட்டில் வெளியிடப்படவிருக்கும் அறிக்கையொன்று எதிர்காலத்தில் உலக நாடுகள் மட்டுப்படுத்த அளவு பொருளாதார வளர்ச்சியையே குறிவைக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் தேக்கத்தால் வெளியிடப்படும் கரியமிலவாயுவின் அளவு குறைந்திருப்பினும் இத்தனை காலமும் வெளியிடப்பட்டு வந்த அளவுகளால் மோசமாகிவிட்ட வளிமண்டலத்தில் தொடர்ந்தும் சமநிலை நிலவவில்லை.
உலக நாடுகளில் வாழும் மக்களின் வருமானத்தையும் அவர்களுடைய கரியமிலவாயு வெளியேற்றலையும் கவனித்ததில் ஒரே ஒரு விகிதமான பணக்காரர்கள் 50 விகிதமான உலக வறியவர்களை விட அதிகமாகச் சூழலை அசுத்தமாக்குறார்கள் என்று தெரிகிறது. வறிய மக்களும் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமானால் குறிப்பிட்ட அந்தப் பணக்காரர்களின் வாழ்வுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
2030 ஆண்டுக்குள், அந்த 1 % விகித அதி பணக்காரர்கள் தமது வாழும் முறையில் ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றங்கள் 30 % அவர்களுடைய கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்கவேண்டும்.அதே சமயம் அந்த மாறுதல்கள் வறிய 50 % த்தினர் தமது வாழ்க்கை வசதிகளை மூன்று மடங்கு உயர்த்திக்கொள்ளவும் உதவும். அப்படியான மாற்றங்களாலேயே பாரிஸ் உடன்படிக்கையின்படி 1.5 செல்சியஸால் பூமியின் வெம்மையைக் குறைக்க உதவும்.
சாள்ஸ் ஜெ. போமன்