அன்னை திரேசாவால் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவன வெளிநாட்டு நிதி முடக்கம்|பிழையான நிதி உள்ளீடுகள் காரணமாம்.

அன்னை தெரசா ஆரம்பித்த தொண்டு நிறுவனத்திற்கான வெளிநாட்டு நிதியுதவி உரிமத்தை புதுப்பிக்க இந்திய அரசு மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மிஷனரீஸ் ஆயிரக்கணக்கான கன்னியாஸ்திரிகள், கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக வீடுகள், பள்ளிகள், மருத்துவப்பணிகள் என பல்வேறு திட்டங்களை மேற்பார்வையிடுகின்றனர்.

கடந்த நத்தார் நாளன்று ,இந்த தொண்டு நிறுவன பதிவை புதுப்பிக்கப்படமாட்டாது என்று இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.குறிப்பிட்ட தீர்மானம் குறித்த நிறுவனத்திற்கு வந்த :பிழையான நிதி உள்ளீடுகள்” காரணமாக எடுக்கப்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெற்றிநடை இணையம் அறிகிறது.

கடந்த காலங்களில் இந்த தொண்டு நிறுவனம் தனது உதவித்திட்டங்களைப் தந்திரோபாயமாக பயன்படுத்தி மக்களை இந்து சமயத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாற்றுவதாக, இந்து சமய அமைப்புக்கள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருவதன் பின்னணியிலேயே, இந்த தொண்டு நிறுவனத்துக்கான தடையை இந்திய உள்துறை அமைச்சு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை குறித்த அந்த தொண்டு நிறுவனம் மறுத்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,தொண்டு நிறுவன புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது, அத்துடன் குறித்த விவகாரம் தீர்க்கப்படும் வரை” எந்தவித வெளிநாட்டு நிதிகளையும் கணக்குகளையும் இயங்க அனுமதிக்முடியாது எனவும் அறிவித்துள்ளது.

கல்கத்தாவை தளமாகக் கொண்டு இயங்கும் குறித்த தொண்டு நிறுவனமானது 1950 ஆம் ஆண்டில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.