தயாரிப்பிலில்லாத பசுக்களைக் கொல்வதைத் தடுப்பது விவசாயிகளுக்குத் தீமை விளைவிக்கும்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் “பசுக்களைக் கொல்லக்கூடாது” என்ற சட்டம் விவசாயிகளுக்குத் தீமையையே விளைவிக்கும் என்கிறது கர்நாடக ராஜ்யா ரைதா சங்கா. தயாரிப்பில் இல்லாத பசுக்களைப் பேணுவதற்கு விவசாயிகளின் வருமானத்திலிருந்து தான் செலவு செய்யவேண்டுமென்று சுட்டிக் காட்டப்படுகிறது.
“பசுக்களைக் கொல்வதற்கெதிராகச் சட்டம் கொண்டுவருபவர்கள் விவசாயிகளுக்கு எதிராகவே நடக்கிறார்கள். நாங்களும் பசுவதையை விரும்பவில்லை. ஆனால், சட்டப்படி தற்சமயத்தில் எந்தத் தயாரிப்பும் தராத பசுக்களை விவசாயிகள் விற்க முடியாது. வருமானமேதும் தராத அப்பசுக்களை விவசாயிகள் தங்கள் செலவில் பராமரிக்கவேண்டும்,” என்கிறார் அந்தச் சங்கத்தைச் சேர்ந்த பதகல்புர நாகேந்திரா.
ஒரு விவசாயில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் பசுக்களை வைத்திருக்க முயல்கிறார். அவைகளை காக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் வருமானத்தை ஒடுக்கிறவர்கள் உண்மையில் விவசாயிகளுக்கு எதிரானவர்களே. பசுக்களை உண்மையிலேயே காப்பவர்கள் விவசாயிகள்தான். அதற்கான தனியான பசுக்காவலர் சங்கங்கள் தேவையில்லை என்கிறார் அவர்.
பசுக்களை விவசாயிகள் விற்கக்கூடாது அவைகளைக் கொல்லக்கூடாது என்ற சட்டம் தோல் பொருட்களின் தயாரிப்புக்கும் உகந்ததல்ல என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்