இந்த வருடம் [2020] தான் சுவீடன் நாட்டின் சரித்திரத்திலேயே வெம்மையான வருடம்.
வட துருவக் காலநிலையைச் சேர்ந்த சுவீடனில் காலநிலையை அளக்க ஆரம்பித்த 160 வருடங்களில் இதுபோன்ற வெம்மையான வருடம் இருந்ததில்லை என்று நாட்டின் காலநிலை நிலையம் தெரிவிக்கிறது. இவ்வருடம் முழுவதையும் நோக்கினால் வருடத்தின் சராசரியாக 0.5 செல்ஸியஸால் அதிகரித்திருக்கிறது. இதற்கு முன்னர் 2014 ம் ஆண்டு சுவீடனின் அதிக வெம்மையான வருடமாக இருந்தது.
உலகின் வெப்பநிலையே கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதை விஞ்ஞானிகள் கவனித்து வருகிறார்கள். முக்கியமாக வட துருவத்தின் வெப்பநிலை உலகின் சராசரி வெப்பநிலையை விட அதிகமாகி வருகிறது. இவ்வருட வெப்பநிலை அதிகரிப்பு ஒரு விசேட விடயமல்ல என்று கூறும் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் பொதுவாகவே வெப்பநிலை அதிகரித்தல் பல வருடங்களாகவே அதிகரித்து வருவதுதான் கவலைக்குரியது என்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்