மேலுமொரு கொவிட் 19 ரகம் டென்மார்க்கில் உலவி வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டனில் வேகமாகப் பரவிவருவதையும், டென்மார்க்கில் மிங்க் என்ற மிருகங்களினுடாக தம்மை மாற்றிக்கொண்டவையும் விட மேலுமொரு வகை கொரோனாக் கிருமிகள் டென்மார்க்கில் கவனிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட வகை கிருமிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகளை மீறக்கூடியவையாக இருப்பதாகவும் அது விசனத்துக்கு உரியது என்றும் குறிப்பிடப்படுகிறது. மேற்கண்ட வகையான கிருமிகளை சுமார் 1,600 பேரிடம் காணக்கூடியதாக இருந்ததாக டென்மார்க்கின் நோய்ப்பரவல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்