2050 இல் ஜப்பானின் கரியமிலவாயு வெளியீட்டை 0 ஆக்குவதற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன.

ஜப்பான் 2050 ல் தனது நாட்டில் வெளியிடப்படும் கரியமிலவாயுவை கடுமையாகக் குறைத்து, வெளிவருவதை முழுவதும் திரும்ப உறிஞ்சிக்கொள்ளும் நடவடிக்கைகளையும் செய்யும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் அறிவித்திருந்தது.

2017 இல் காலநிலையைச் சூடாக்குவதற்கான நடவடிக்கைகளில் உலகின் ஆறாவது இடத்திலிருந்த நாடு ஜப்பான். அதைப் படிப்படியாக எப்படிச் குறைக்கப்போகிறார்கள் என்பதற்கான திட்டங்களை ஜப்பானிய அரசு வெளியிட்டிருக்கிறது.

2050 அளவில் ஜப்பானுக்குப் பாவிப்புக்குத் தேவையான மின்சாரத்தின் அளவு தற்போதையதை விட 30 – 50 விகிதத்தால் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அச்சத்தியில் பாதியையாவது இயற்கைவளங்களைப் பாதிக்காத மீண்டும் பாவிக்கப்படக்கூடிய வளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள ஜப்பான் திட்டங்களைத் தீட்டியிருக்கிறது. அவைகளில் ஒரு பகுதி அணுமின்சாரம், வெப்ப மின் நிலையங்களிலிருந்து உண்டாக்கப்படும். அதே சமயம் காற்றாடிகளிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் கணிசமாக அதிகரிக்கப்படும். அவைகளைக் கையாளும் உரிமைகளைத் தனியார் நிறுவனங்களுக்கு அரசு விற்கும்.

வாகனங்களைப் பொறுத்தவரை முழுவதுமே எரி நெய்யால் பாவிக்கப்படும் வாகனங்களின் விற்பனை 2030 இல் நிறுத்தப்படும். அதன் பின்னர் மின்கலம், பகுதி எரிநெய், சக்தியை மீண்டும் பாவிக்கும் வாகனங்கள் போன்றவையே விற்கப்படலாம் என்று அறிவித்திருக்கிறது. தற்போது மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கும் மின்கலங்களின் விலைகள் குறைக்கப்படும், புதிய வித மின்கலத் தொழில் நுட்பங்களாலான கலங்கள் தயாரிப்பு ஊக்கிவிக்கப்படும்.

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *