டிரம்ப் கொடுத்த மன்னிப்புக்களில் சில கேள்விக்குறியாகின்றன.
2007 இல் ஈராக்குக்கு ஐ.நா சபையின் பாதுகாப்புப்படையாக அனுப்பப்பட்டு அங்கே காரணமின்றிப் பொதுமக்களைக் கொலைசெய்த, சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்புப் பெற்ற நான்கு அமெரிக்க இராணுவத்தினரின் மன்னிப்பு சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்று மனித உரிமைச் சட்ட வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
பாக்தாத் நிசூர் சதுக்கத்தில் போக்குவரத்து நேரத்தில் நிராயுதபாணியரான 14 சாதாரண ஈராக்கியரைச் சுட்டுக் கொன்றார்கள் சுதந்திரமாகப் பாதுகாவலர்களாக “பிளக்வாட்டர்” என்ற நிறுவனத்துக்காகப் பணியாற்றிய அந்த அமெரிக்கர்கள். அவர்களுடைய நிறுவனத்தில் டிரம்ப்பின் அமைச்சரொருவரின் சகோதரருக்குச் சொந்தமானது.
“அமெரிக்கா சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டு எடுக்கவேண்டிய பொறுப்புக்களைக் கவனிக்கும்போது இந்த மன்னிப்பு சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள கடமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகளை பரந்த அளவில் ஏளனத்துக்கு உட்படுத்துகின்றன”, என்கிறது ஐ.நா-வின் மனித உரிமைகளைப் பேணும் அமைப்பின் சட்டத்தரணிகள்.
குறிப்பிட்ட இராணுவத்தினருக்குக் கொடுக்கப்பட்ட மன்னிப்புக்களை ஈராக்குக்கான அமெரிக்கத் தூதரும், வெளிநாடுகளுக்கான அமெரிக்காவின் இராணுவத்தளபதியும் ஏற்கனவே, “இந்த மன்னிப்பின் மூலம் அமெரிக்க இராணுவத்தினர் உலகில் எங்கேயும் படு கேவலமான குற்றங்களில் ஈடுபடலாம்,” என்ற செய்தியையே உலகம் பெற்றுக்கொள்கிறது என்று பகிரங்கமாகக் கண்டித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ.போமன்