உலக நாடுகளின் இராணுவச் செலவுகள் மேலும் அதிகரிப்பதைப் பெருந்தொற்றுக்காலத்தாலும் நிறுத்த முடியவில்லை.

2020 ம் ஆண்டு உலக நாடுகள் தமது இராணுவத்த்துக்காகவும், அவைகளின் தளபாடங்களுக்காகவும் செலவு செய்த தொகை சுமார் 1.8 திரில்லியன் டொலர்களாகும். அது 2019 ம் ஆண்டு அவைக்காகச் செலவழிக்கப்பட்டதை விடச் சுமார் 3.9 % ஆல் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

உலகின் கடந்த வருட இராணுவச் செலவுகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் சீனாவின் கடற்படை விஸ்தரிப்பே ஆகும். ஆசிய நாடுகளின் இராணுவச் செலவுகளில் 25 % சீனாவுடையதாகும். ஆசியாவின் 10.6 விகிதமான அது 193.3 பில்லியன் டொலர்களாகும். ஆசியாவின் மற்றைய நாடுகளின் இராணுவச் செலவு அதற்கு முந்தைய வருடத்தைவிடக் குறைந்திருக்கிறது.

ஆனால் தொடர்ந்தும் உலகின் மிக அதிகமான இராணுவச் செலவான 40 விகிதத்தை அமெரிக்காவே செய்கிறது. அது மொத்த இராணுவச் செலவில் சுமார் 40 விகிதமாகும்.

ஐரோப்பிய நாடுகளின் இராணுவச் செலவும் கடந்த வருடம் சுமார் 2 % தத்தால் அதிகரித்திருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *