டொமினியன் வோட்டிங் சிஸ்டம் தம் மீது அவதூறு கூறியதாக பொக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் மீது வழக்கு.

டெலவெயார் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்குப்படி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான பொக்ஸ் நியூஸ் (Fox News) நிறுவனம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பாவிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இயந்திரம் பற்றி அவதூறான செய்தியைப் பரப்பியது. அச்செய்தியால் பாதிக்கப்பட்டதாகக் கூறி டொமினியன் வோட்டிங் சிஸ்டம் ( Dominion Voting Systems) அந்த ஊடகத்திடம் 1.6 பில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கோரியிருக்கிறது.

https://vetrinadai.com/news/impeachment-trump-violence/

கடைசியாகப் பதவியிலிருந்த நாள் வரை 2020 தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத மாஜி ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதே கருத்தை எப்போதும் குறிப்பிட்டு வந்திருந்தார். அதை அவரது ஆதர்ச வாக்காளர்கள் தொடர்ந்தும் நம்பி வருகின்றனர். தேர்தலில் பாவிக்கப்பட்ட இரண்டு வாக்களிக்கும் நிறுவனங்களும் இதே போன்ற வழக்குகளை டொனால்ட் டிரம்ப்பின் மீதும் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“நாம் அமெரிக்கப் பாரம்பரியத்துடன் மிகச் சிறந்த முறையில் 2020 தேர்தலைப் பற்றிய செய்திகளைத் தயாரித்து வெளியிட்டோம். எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிச்சயமாக எதிர்கொண்டு வெல்வோம்,” என்று பொக்ஸ் நியூஸ் நிறுவனம் தனது பதில் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *