ரஷ்யத் தடுப்பூசி இருமுறை ஏற்றிய ஆஜென்ரீனா அதிபருக்கு தொற்று!

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகுவது பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கி உள்ளன.

ஆஜென்ரீனாவின் அதிபர் அல்பேர்ட்டோ பெர்னான்டெஸ் (Alberto Fernandez) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளார் என்ற தகவலை தனது ருவீற்றரில் பதிவு செய்துள்ளார்.

முதலாவது பரிசோதனை தொற்றை உறுதிசெய்துள்ளது என்றும் இரண்டாவது பிசிஆர் (polymerase chain reaction) சோதனை முடிவுக்காகக் காத்திருப்பதா கவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

வெள்ளியன்று தனது 62 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர் தேகாரோக்கியத்துடன் சுய தனிமையில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிபர் அல்பேர்ட்டோ கடந்த பெப்ரவரி யில் ரஷ்யத் தயாரிப்பாகிய ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசியின் (Sputnik V) இரண்டாவது டோஸை ஏற்றிக் கொண்டார் என்று அதிகாரிகள் ஏஎப்பி செய்தி நிறுவனத்
திடம் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான ஆஜென்ரீனா நாட்டை வைரஸின் இரண்டாவது அலை மிகமோசமாகத் தாக்கி உள்ளது. இதுவரை 2.3 மில்லியன் பேர் தொற்றுக் காளாகி உள்ளனர். 55ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *