அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து மீது ஐரோப்பிய ஒன்றியத் தடுப்பு மருந்துத் தலைமையகம் நேர்மறையான செய்தி.
ஐரோப்பாவின் பல நாடுகளில் கவனிக்கப்பட்ட இரத்தக்கட்டிகளை ஏற்படுத்துதல், இறப்புக்களுக்கும் அந்தத் தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இருப்பதாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை ஆராயும் அமைப்பின் தலைவர் மார்க்கோ கவாலேரி குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தாலிய ஊடகமொன்றுக்குக் கவாலேரி அளித்திருக்கும் பேட்டியில் “அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துக்கும் அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள், இறப்புக்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த விளைவுகள் எந்த வழியில் உண்டாகின்றன என்பதைப் பற்றித் தெரியவில்லை,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே டென்மார்க், நோர்வே, சுவீடன், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடந்ததுபோலவே பிரிட்டனிலும் அதே விதமான விளைவுகளைக் காணமுடிந்திருப்பதாக சமீப நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
சாள்ஸ் ஜெ.போமன்