சொந்தக் கண்டுபிடிப்பான கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொண்ட ஒரேயொரு லத்தீன் அமெரிக்க நாடாகும் கியூபா.
கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் இதுவரை மூன்றாவது படி ஆராய்ச்சிக்குப் போயிருக்கும் 23 மருந்துகளில் இரண்டு கியூபாவுடையது ஆகும். 11 மில்லியன் மக்களைக் கொண்ட குறைந்தளவு பொருளாதார பலம் கொண்ட கியூபா இந்த நிலைக்கு முன்னேறக் காரணம் அந்த நாட்டின் அரசு திட்டமிட்டு 30 வருடங்களாள வளர்த்தெடுத்த நோய்த்தடுப்பு மருந்து ஆராய்ச்சி அமைப்பாகும் என்று குறிப்பிடப்படுகிறது.
2020 இல் கியூபாவில் கொரோனாத் தொற்றுக்கள் சுமார் 12.300 ஆகவும் இறப்புக்கள் 146 ஆகவும் இருந்தன. காரணம் கொரோனாத் தொற்றுக்கள் பரவ ஆரம்பித்தவுடனேயே நாடு அதைக் கட்டுப்படுத்தவும், எதிர்கொள்ளவும் தயாராகியதாகும். அதன்பின் நவம்பரில் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதும் மீண்டும் தொற்றுக்கள் அதிகரித்தன. மார்ச் 2021 கடைசியில் நாட்டில் 70,000 தொற்றுக்களும், 408 இறப்புக்களும் என்று அறிவிக்கப்பட்டது.
மில்லியன் பேருக்கு 1,857 இறப்புக்களைச் சந்தித்த பிரிட்டனுடன் ஒப்பிடும்போது கியூபாவில் அது மில்லியனுக்கு 35 ஆகும். இது உலகளவில் மிகக்குறைந்த தொற்றுக்களும், இறப்புக்களும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் கியூபாவின் மருத்துவ சேவையின் 57 பேர் உலகின் 40 நாடுகளுக்குக் கொரோனாக்காலத்தில் உதவுவதற்கும் போயிருந்தார்கள்.
60 வருடங்களாக அமெரிக்காவின் புறக்கணிப்புக்கு உண்டாகியிருக்கும் கியூபாவின் மீது 2017 க்குப் பிறகு மட்டும் அமெரிக்கா 240 கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அவைகளில் 50 கட்டுப்பாடுகள் கொரோனாப் பரவல்கள் ஆரம்பித்த பின்னர் போடப்பட்டவை. அவைகளையும் மீறி கியூபா தனது தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளில் மொத்தமாக ஐந்து கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஒவ்வொன்றாக வெளியிடவிருக்கிறது.
வரிசையில் முதலாவதாக வரவிருக்கும் நாட்களில் வெளியாகவிருக்கும் கொவிட் 19 மருந்து சொபரானா [Soberana 02] ஆகும், அதைத் தொடர்ந்து விரைவில் அப்டாலா வெளியாகிறது. சொபரானா என்ற சொல் சுயமாக நிற்பது [sovereign) என்று பொருள்படுகிறது. அதன் மூலம் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தனது முக்கிய கோட்பாடொன்றைச் சுட்டிக்காட்டுகிறது.
பல தென்னமெரிக்க நாடுகள் சொபரானா தடுப்பூசியை வாங்கக் காத்திருக்கின்றன. கியூபா தனது தடுப்பு மருந்துகளைத் தனது நாட்டு மக்களிடையே மட்டுமன்று வெவ்வேறு நாடுகளும் பரிசீலிக்கிறது. அவர்களுடைய தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக, பரீட்சைகளில் தென்னமெரிக்க நாடுகள் சில மட்டுமன்றி ஈரான், பாகிஸ்தான், சில ஆபிரிக்க நாடுகள், இந்தியா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
கியூபா மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நல்லுறவுக்கு முயற்சி செய்யவிருப்பதாக ஜோ பைடன் அரசு தனது தேர்தல் பிரச்சாரங்களிலும், ஆட்சிப் பிரகடனத்திலும் குறிப்பிட்டிருந்தாலும் இதுவரை அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்